அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க | Maduraimani
Wednesday, June 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க

113

சென்னை: நடிகை அனுஷ்காவுக்கும், நடிகர் பிரபாஸுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தமாம். பாகுபலி, பாகுபலி 2 படங்களில் ஜோடியாக நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் காதல் குறித்து இருவரும் வாய் திறக்கவில்லை. அனுஷ்கா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை தேடினார்கள். நிஜத்திலும் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி சேர வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும், அவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகிவிட்டதாகவும் அவர்களின் நெருங்கிய நண்பர் தெரிவித்ததாக எழுத்தாளர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் என்றும் அந்த எழுத்தாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.பிரபாஸிடம் திருமணம் பற்றி கேட்டால், அதை பற்றி கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட விஷயம். திருமணம் நடக்கும்போது அனைவருக்கும் சொல்கிறேன் என்கிறார்.திருமணத்திற்காக தான் அனுஷ்கா உடல் எடையை குறைத்து வருகிறாராம். அவர் ஜிம்மில் தவமாய் தவமிருப்பது படத்திற்காக அல்ல பிரபாஸுக்காக என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *