அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு

Tamil_News_large_1875892_318_219

பீட்டர்ஸ்பெர்க் :

அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலையில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பல்கலை., வளாகம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல்கலை போலீஸ் சனிக்கிழமை இரவு (அக்.,14) வெளியிட்ட டுவிட்டர் பதிவில், விர்ஜினியா மாகாண பல்கலை., துப்பாக்கிச் சூடு நடந்ததை அடுத்து, பல்கலை., மூடப்படுகிறது. பொது மக்கள் இப்பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு டுவிட்டில், போலீசார் இன்னும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அதனால் பல்கலை., வளாகம் தொடர்ந்து மூடப்பட்டுகிறது. மக்கள் இப்பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்கவும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் பல்கலை., இணையதளத்தில், பீட்டர்ஸ்பெர்க், விர்ஜினியா பள்ளி மாணவர்களின் வீடு திரும்பும் இறதி நாளை கொண்டாடி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபட்ட தகவல்களால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *