அமேசான் ஆன்லைன் வர்த்தகம் தமிழகம் 4வது இடம் | Maduraimani
Sunday, September 23
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

அமேசான் ஆன்லைன் வர்த்தகம் தமிழகம் 4வது இடம்

அமேசான் இந்தியா ஆன்லைன் வீட்டு உபயோக பொருள் பிரிவு தலைவர் சுஜித்சுபாஸ் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
அமேசான் ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருள் விற்பனை தினமும் அதிகரித்து வருகிறது. அமேசான் இணையதளம் வாயிலாக வீட்டு உபயோக பொருள் விற்பனை செய்ய சென்னையில் மெகா சேமிப்பு கிடங்கு வசதி உள்ளது. பல முன்னணி பிராண்ட் பொருட்களை வாடிக்கையாளர்கள் அமேசான் மூலம் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். 5 ஆயிரம் வகையான பொருட்களை அமேசான் ஆன்லைன் இணையதளத்தில் தேர்வுசெய்யலாம். கடந்த இரண்டு மாதங்களில் ஏர் கண்டிஷனர் மற்றும் ரெப்ரிஜிரேட்டர் நுகர்வு அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.5 மடங்கு அதிகம். ஆன்லைன் விற்பனையில் அகில இந்திய அளவில் தமிழகம் 4வது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு சுஜித்சுபாஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *