ஆயுத உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும்: மத்திய அரசு | Maduraimani
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஆயுத உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும்: மத்திய அரசு

இந்தியாவில் ஆயுத தயாரிப்புக்கான மூலோபாயக் கூட்டணி குறித்த முடிவுகளைப் பாதுகாப்புத் துறை விரைவில் அறிவிக்கப்போவதாகத் தெரிகிறது. மூலோபாயக் கூட்டணி வரைவு திட்டத்தில் இருந்த இடர்பாடுகளைப் பிரதமர் அலுவலகமும், பாதுகாப்புத் துறை அமைச்சரான அருண் ஜேட்லியின் சீரான கவனம் தீர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய ஆயுத தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கும் எதுவாகத் திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2016 மத்திய அரசு ஆயுத உற்பத்தி மற்றும் தயாரிப்பை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தாலும் பிப்ரவரி 2016 முதல் மூலோபாயக் கூட்டணி வரைவு திட்டத்தைத் தயாரிப்பதில் தொடந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் பொறுமையை இழந்து தவித்து வந்தது. கடைசிக் கட்ட ஆலோசனை இந்நிலையில் திட்ட வரைவு அறிமுகம் குறித்துக் கடந்த வாரம் பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது, இதன் மூலம் தற்போசு கடைசிக் கட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் 3 துறைகளில் இருந்து 3 தனியார் நிறுவனங்களை வியாழக்கிழமை ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மூலோபாயக் கூட்டணி வரைவு திட்டம் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   தனியார் நிறுவனம் மத்திய அரசு இந்தியாவில் ஆயுத தயாரிப்பை ஊக்கப்படுத்த துவங்கி நாள் முதல் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி, முதலீடு செய்ய வங்கிகளுடன் கடன் பெற பேச்சுவார்த்தை, தொழிற்சாலை அமைக்கும் பணிகள் எனப் பம்பரமாகச் சுற்றி வந்தது. ஆனால் மத்திய அரசின் கூட்டணி குறித்த வரைவு திட்டத்தை அறிவிக்கக் காலதாமதம் ஆனா காரணத்தால் தவித்து வந்தது.    முக்கியத் தயாரிப்புகள் பாதுகாப்பு அமைச்சகம் மூலோபாயக் கூட்டணி வரைவு திட்டத்தை அறிவித்த உடனேயே முதல் கட்டமாக நீர்மூழ்கி கப்பல், கடற்படை பயன்பாட்டு ஹெலிக்காப்படர், ஒற்றை என்ஜின் பைடர் ஏர்கிராப்ட், ராணுவத்திற்குக் குண்டு துளைக்காத வாகனங்கள் ஆகியவற்றைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 20 வருடம் இந்தியாவில் நிலையான வளர்ச்சியில் ஆயுத உற்பத்தி இந்திய நிறுவனங்கள் ஈடுப்பட்டால் அடுத்த 20 வருடத்தில் இந்தியாவில் அதிகளவில் வருவாய் அளிக்கும் சந்தையாக ஆயுத உற்பத்தி துறை இருக்கும். மேலும் இதன் மூலம் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பது மட்டும் அல்லாமல் வல்லரசு நாடுகளுடன் எளிமையாகப் போட்டி போட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *