இன்று சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாடு | Maduraimani
Sunday, September 23
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

இன்று சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாடு

Tamil_News_large_1975990

புதுடில்லி:

23 நாட்டுத் தலைவர்கள் மற்றும் 10 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இன்று புதுடில்லியில் துவங்குகிறது.

பருவநிலை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய, சில ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து சூரியசக்தி கூட்டமைப்பை உருவாக்கின. இதில் சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகள் எரிபொருளுக்கு பதில் சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த மாநாடு நடக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துதல் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட 45 நாட்டுத் தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் துவங்க உள்ள இந்த மாநாட்டினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். மாநாட்டில் பங்கேற்க வருபவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்கின்றனர்.

குறைந்த செலவில் சூரிய சக்தியை சேமிக்கும் முறை, அதனைப் பயன்படுத்தும் முறை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான 24 திட்டங்கள் நிறைவேற்றபடலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *