இமாச்சல்லில் ரஜினி தியானம் | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

இமாச்சல்லில் ரஜினி தியானம்

Tamil_News_large_1976101

தர்மசாலா:

அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், இமாச்சல பிரதேசம் பாலம்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதால் அரசியலில் இறங்கி ஆன்மிக அரசியலை கொண்டு வரப்போவதாக போவதாக அறிவித்த நடிகர் ரஜினி அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அவர் இமயமலைக்கு கிளம்பி சென்றார். நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள் கங்கரா நகர் வந்தார். அங்கிருந்து பாலம்பூர் மாவட்டம் கன்ட்படி கிராமத்தில் உள்ள மகாவதார் பாபா ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்து வருகிறார். அங்கு அவர் 10 நாளுக்கு மேல் தங்கியிருப்பார் என தெரிகிறது. இது ரஜினியின் தனிப்பட்ட பயணம் என அவரது உதவியாளர் கூறியுள்ளார். அங்கு ரஜினியை இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமால் சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *