உலகமே வியக்கும் ‘ரிலையன்ஸ் ஜியோ’ தொடங்க இவர்கள் தான் காரணம்; முகேஷ் அம்பானி பளீர்! | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

உலகமே வியக்கும் ‘ரிலையன்ஸ் ஜியோ’ தொடங்க இவர்கள் தான் காரணம்; முகேஷ் அம்பானி பளீர்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சேவை தொடங்குவதற்கு காரணமானவர்கள் குறித்து முகேஷ் அம்பானி பகிர்ந்து கொண்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா, யேல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த போது, இணையதளச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே நமது வீட்டில் இணையச் சேவை சரியில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, குரல் அழைப்புகளை தவிர, தொலைத்தொடர்பு சேவையில் பயன்படுத்த நிறைய இருக்கிறது. இவையெல்லாம் உங்கள் தலைமுறைக்கு கிடைக்காது என்று கிண்டலாக கூறியுள்ளார்.
இந்த சூழலில் கடந்த 2011ஆம் ஆண்டு, ஜியோ சேவை குறித்து ஈஷா, தந்தையிடம் கூறியுள்ளார். அதனை 2016ல் வெற்றிகரமாக முகேஷ் அம்பானி நிறைவேற்றி காட்டியுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகனும், மகளும் தான் ஜியோ தொடங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளனர். தற்போது பிற தொலைத்தொடர்பு சேவைகளுக்கு கடும் போட்டியாக ஜியோ திகழ்கிறது. அதிவேக இணையம் என்றாலே ஜியோ தான் என்று கூறும் அளவிற்கு சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்த ஜியோ, உலக அளவில் பிரம்மாண்டமாக மாறிக் கொண்டிருக்கிறது.
ஜியோ 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் 3வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவையாக ஜியோ உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ வருகைக்கு பின்னர், இந்திய ஸ்மார்ட்போன்கள் அதிக இணையச் சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளன. இணையப் பயன்பாட்டில் 155வது இருந்த இந்தியா, தற்போது முதலிடத்தில் இருப்பதற்கு ஜியோவின் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *