ஊழியர்களை மையமாக வைத்து புதிய திட்டம். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அதிரடி. | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஊழியர்களை மையமாக வைத்து புதிய திட்டம். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அதிரடி.

இந்தியாவின் 4வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஊழியர்கள் வெளியேற்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிலையான, உறுதியான சேவைகளைத் தொடர்ந்து அளிக்கும் வகையில் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் இதுநாள் வரையில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு என நாட்டின் பெரிய நகரங்களில் மட்டுமே நிறுவனத்தை அமைத்து வர்த்தகம் செய்து வந்தது. இந்நிலையில் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் இந்தியாவில் துவங்குவதற்கு முன்பாகவே சிறு நகரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லக்னோ மற்றும் மதுரையில் மிகப்பெரிய வர்த்தகக் கிளையைத் திறந்தது.

இதுமட்டும் அல்லாமல் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் சமீபத்தில் நாக்பூர் நகரத்தில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது, இது ஏப்ரல் முதல் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது. அடுத்த வர்த்தக இலக்காக விஜயவாடாவை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தேர்வு செய்துள்ளது. புதிதாகத் துவங்கப்படும் அலுவலகத்தில் சுமார் 10,000 பேர் பணியாற்ற முடியும்.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 70 சதவீதம் பேர் 2ஆம் தர நகரங்களில் இருந்து வருகின்றனர். மீதமுள்ள 30-40 சதவீத ஊழியர்கள் மட்டுமே மெட்ரோ நகரங்களில் இருந்து வருகின்றனர்.

இப்படி 2ஆம் தர நகரங்களில் வர்த்தகம் செய்யத் துவங்கும் போது ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகளவில் குறைய முடியும். பொதுவாக வெளியிடங்களில் இருந்து பணியாற்றும் ஊழியர்களே அதிகளவில் நிறுவனங்களை விட்டு வெளியேறுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த 2ஆம் தர நகர வர்த்தகம் பெரிய அளவில் உதவும்.

ஹெச்சில் மதுரை கிளை இயக்கம் 2016 செப்டம்பரில் துவங்கியது, லக்னோ வர்த்தகம் அதே வருடத்தில் அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்டது. தற்போது இவ்விரு நகர அலுவலகங்களிலும் சுமார் 4,000 பேர் பணியாற்றுகின்றனர்.

2ஆம் தர நகரங்களில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் மெட்ரோ நகர ஊழியர்களை விடச் சற்று குறைவாகவே உள்ளது

தற்போது மதுரை கிளையில் பணியாற்றும் ஊழியர்களின் வாய்ப்புகள் மற்றும் சம்பள அளவுகளைத் தெரிந்துகொண்டால் 2ஆம் தர நகரங்களில் இருக்கும் நிறுவனங்களில் கரியர் வளர்ச்சியைக் கணித்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *