என்னை புகழ்ந்து பேச வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

என்னை புகழ்ந்து பேச வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

download

சென்னை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக தொடங்கியது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கபட்டது.

ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஒகி புயல் பாதிப்பின்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஒகி புயல் பாதிப்பின்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். குமரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் நேரடியாக சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டார். என சபாநாயகர் தனபால் கூறினார்.

கேள்விநேரத்தில், ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் என கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பாராட்டினார். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் அனைத்து பாராட்டுக்களுக்கும் உரியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே.சட்டப்பேரவையில் என்னை புகழ்ந்தும், பாராட்டியும் பேச வேண்டாம் – பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *