கருணாநிதியின் நலம் விசாரித்தார் நடிகர் விஜய் | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

கருணாநிதியின் நலம் விசாரித்தார் நடிகர் விஜய்

201808011053127230_Vijay-visits-Kauvery-Hospital-for-Karunanidhis-health_SECVPF

சென்னை:

உடல்நலக்குறைவால் அவதிப்படும் திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், நடிகர்கள் என பலரும் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் குறித்து, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் கருணாநிதியின் நலம் விசாரித்து வருகின்றனர்.

இன்று நடிகர் விஜய், மருத்துவமனைக்கு வந்து, ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது. கடந்த ஜூலை 29 அன்று ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின், கருணாநிதி மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் மேலும் சில நாட்களுக்கு தங்கி சிகிச்சை பெற வேண்டும். ரத்தம், கல்லீரல் தொடர்பான சிகிச்சை தொடர்ந்து தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *