கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றம் | Maduraimani
Saturday, April 21
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றம்

Tamil_News_large_1998905

சென்னை :

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12ம் தேதி எல்லோருடைய வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கறுப்பு உடையணிய வேண்டும் என்றும், கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *