கறுப்புச்சட்டையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடியார்! | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

கறுப்புச்சட்டையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடியார்!

xedapadi-black-shirt-05-1512449113.jpg.pagespeed.ic.kLpjb-T-4X

சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கறுப்புச்சட்டை அணிந்து தனது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முதவல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிமுகவினர் கறுப்புச்சட்டை அணிந்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கறுப்புச்சட்டை அணிந்து தனது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பிரமாண்ட படத்திற்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஆதரவாளர்கள் பலரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *