காயம் காரணமாக வெய்ன் பிராவோ விளையாடுவது சந்தேகம் – Maduraimani
Monday, June 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

காயம் காரணமாக வெய்ன் பிராவோ விளையாடுவது சந்தேகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் நாளைய ஆட்டத்தில் காயம் காரணமாக வெய்ன் பிராவோ விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ காயம் அடைந்தார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்படுகிறார். இன்று அவருக்கு காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது. இதில் கிடைக்கும் முடிவை பொறுத்து பிராவோ போட்டியில் விளையாடுவது குறித்து தெரியவரும்.

ஆனால் காயத்தின் தன்மை அதிகமாகி விடக்கூடாது என்று கருதினால் அவர் விளையாடுவது சந்தேகம்தான். அவர் விளையாடாத பட்சத்தில் நியூசிலாந்து வீரர் குஜ்ஜிலின் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *