காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம் | Maduraimani
Wednesday, June 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்

Tamil_News_large_2001379

சூரத் :
காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், உ.பி.,யில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காஷ்மீரைப் போன்று சூரத்திலும் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 10 நாட்களுக்கு முன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அந்த சிறுமியின் உடலில் 86 இடங்களில் காயங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சூரத் கிரிக்கெட் மைதானம் அருகே அச்சிறுமியின் உடல் ஏப்ரல் 16 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *