குஜராத் தேர்தலில் ‘ப்ளூடூத்’ மூலம் முறைகேடா? | Maduraimani
Wednesday, June 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

குஜராத் தேர்தலில் ‘ப்ளூடூத்’ மூலம் முறைகேடா?

Tamil_News_large_1915593

ஆமதாபாத்:

குஜராத்தில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரமும் அவற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தன.

வாக்குப்பதிவு நடைபெற்ற போது பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானதுடன், வாக்காளர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்பட்டது. பின்னர் பழுதடைந்த எந்திரங்களுக்கு பதிலாக மாற்று எந்திரங்கள் பொருத்தப்பட்டன.

இதற்கிடையே வாக்குப்பதிவு எந்திரங்களுடன் மொபைல்போன் ‘ப்ளூடூத்’ கருவி இணைக்கப்பட்டு இருந்ததாக போர்பந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியா பரபரப்பு புகார் கூறினார். சில வாக்குப்பதிவு எந்திரங்கள், மொபைல்போன் போன்ற வெளிக்கருவிகளுடன் ‘புளூடூத்’ மூலம் இணைக்கப்பட்டு இருந்ததாக கூறிய அவர், அந்த கருவிகள் தொடர்பான படங்களுடன் தேர்தல் கமிஷனில் புகாரும் செய்தார்.

அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகாரை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. அர்ஜூன் மோத்வாடியாவின் புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், அந்த ‘ப்ளூடூத்’ கருவி பூத் ஏஜெண்டு ஒருவரின் மொபைல்போனுக்குரியது என தெரிய வந்துள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.பி.ஸ்வைன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *