குண்டடிபட்ட கர்ப்பிணியை காப்பாற்றிய ராணுவ டாக்டர்கள் | Maduraimani
Friday, May 25
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

குண்டடிபட்ட கர்ப்பிணியை காப்பாற்றிய ராணுவ டாக்டர்கள்

Tamil_News_large_1957251

ஸ்ரீநகர்:

சுஞ்ச்வான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குண்டடிபட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ராணுவ மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஜம்மு – காஷ்மீரில், ஜம்மு மாவட்டத்தில், சுஞ்ச்வான் ராணுவ முகாமில், பாக்.,கைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி, திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு, இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி தந்தனர். இத்தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் குண்டு காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை நீண்ட போராட்டத்திற்கு பின் ராணுவ டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். அவருக்கு ராணுவ மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
தன்னையும், தனது குழந்தையையும் காப்பாற்றிய ராணுவ டாக்டர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார். ராணுவ மருத்துவமனை டாக்டர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *