குளத்தில் விழுந்த கர்நாடக அரசு சொகுசு பஸ்.. 8 பயணிகள் பரிதாப பலி | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

குளத்தில் விழுந்த கர்நாடக அரசு சொகுசு பஸ்.. 8 பயணிகள் பரிதாப பலி

karnataka-bus-accident54-13-1515819423

ஹாசன்:

கர்நாடக மாநிலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பயணிகள் பலியானார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட அரசின் KA01 F8513 பதிவு எண் கொண்ட வோல்வோ சொகுசு பேருந்து தர்மசாலாவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை மூன்றரை மணியளவில் பேருந்து ஹாசன் நகரின் அருகே சென்றுக்கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைக்கு அருகே இருந்த குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார்கள். மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகினர். மேலும் பேருந்திலிருந்த அனைவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *