சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஸித்தி அடைந்தார் | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஸித்தி அடைந்தார்

201802281044459529_Shankaracharya-Jayendur-The-body-was-placed-for-tribute-Life_SECVPF Tamil_News_large_1968500

காஞ்சிபுரம் :

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார்.
மூச்சு திணறல் காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார். பல நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் ஸித்தி அடைந்தார்.

1935 ம் ஆண்டு ஜூலை 18 ம் தேதி பிறந்த ஜெயேந்திரரின் இயற்பெயர் சுப்ரமணிய மகாதேவ ஐயர். 84 வயதாகும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தனது 19வது வயதில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றார். 1994 ம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தின் 69வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *