சச்சினால் முடிந்தது நெஹ்ராவால் முடியாதா…? ஷேவாக் விளாசல் ! | Maduraimani
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சச்சினால் முடிந்தது நெஹ்ராவால் முடியாதா…? ஷேவாக் விளாசல் !

sehwag425-06-1507269931

டெல்லி:

சச்சினுக்கு நாற்பது வயது வரை கிரிக்கெட் ஆட வாய்ப்பு அளித்தது போல நெஹ்ராவுக்கும் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் கூறியுள்ளார். அவர் இன்னமும் நல்ல உடல் தகுதியோடுதான் இருக்கிறார். சச்சின் போல அவரும் சிறப்பாக இந்திய அணிக்கு பங்காற்றுவார் என ஷேவாக் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி- 20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது வருகை இந்திய அணிக்கு மேலும் வலுவை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக், அணியில் மீண்டும் நெஹ்ரா சேர்க்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது எந்தவகையிலும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சச்சினால் 40 வயது வரை சிறப்பாக விளையாட முடிந்த போது கண்டிப்பாக நெஹ்ராவும் அணியில் சிறப்பாக விளையாடுவார்” என்று கூறியுள்ளார். இந்திய அணியில் விளையாடுவதற்கான அனைத்து சோதனைகளையும் கடந்து மீண்டும் அணியில் இணைந்துள்ளார் நெஹ்ரா. இப்போது இருக்கும் இளம் வீரர்களின் அதே உடல் தகுதியோடு நெஹ்ரா இருப்பதாக இந்திய கிரிக்கெட் தேர்வு கமிட்டி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக “இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அதிகம் ஓரம் கட்டப்படுகின்றனர். கம்பீர், யுவராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நெஹ்ரா இன்னும் அதிக போட்டிகளில் சேர்க்கப்பட வேண்டும்” என்று ஷேவாக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *