சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சிகப்பு அரிசி…! – Maduraimani
Friday, April 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சிகப்பு அரிசி…!

பிரவுன் ரைஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிவப்பு அரிசியை, தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும்  கூறுவர். சிகப்பு அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகம் உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.     சிவப்பு அரிசியில் நார் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்டராலின் அளவை குறைத்து ரத்தத்தை சீராக்கும்  திறன் கொண்டது.   இந்த நார்சத்து புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்ளுவதால்,  கோலோன் புற்றுநோய் தடுக்கப் படுகிறது.   வைட்டமின் B6 நிறைந்தது. இருதய நோய்களை தடுக்க உதவும். மெக்னீசியம் நிறைந்தது. வலுவான எலும்புகளை உருவாக்கும். மலக்கட்டு ஏற்படாமல், மலம் சுலபமாக வெளியேறவும் உதவுகிறது.   சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக்  குறைக்கவும் உதவுகிறது.   சிகப்பு அரிசியில் உள்ள தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.   வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என சமைக்கலாம்.   புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய  தன்மைகள் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *