சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைத்தார் ஓ.பி.எஸ். | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைத்தார் ஓ.பி.எஸ்.

Tamil_News_large_1866543_318_219

சென்னை :

நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக, சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக்.,1) திறந்து வைத்தார். சிவாஜியின் பிறந்த நாளான இன்று, இந்த மணிமண்டபம் திறக்கப்பட்டது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் கலந்துகொண்டனர். சிவாஜி கணேசன் நினைவைப் போற்றும் வகையில் அரிய பல புகைப்படங்கள் இந்த மணிமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன. சிவாஜி குடும்பத்தினர், திரையுலகினர் உட்பட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். சிவாஜி மணிமண்டப நிகழ்ச்சியில் நடிகர்- நடிகைகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்கம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.இந்த மணிமண்டபத்தில், கோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்ட சிவாஜியின் சிலையும் திறக்கப்பட்டது. படத்திற்கு பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சிவாஜி குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *