சேலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் அமைக்க இடம் தேர்வு: முதலமைச்சர் எடப்பாடி தகவல் | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சேலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் அமைக்க இடம் தேர்வு: முதலமைச்சர் எடப்பாடி தகவல்

201801131042175648_CM-Edappadi-says-Place-selection-to-set-up-a-bus-port-with_SECVPF
சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து 103.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் முதல் நிகழ்ச்சியாக சேலம் இரும்பாலை சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சேகோசர்வ் அருகில் ரூ.21.97 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று காலை அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலம் இரும்பாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.21.97 கோடியில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்று சேலம் 5 ரோடு பகுதியில் ஈரடுக்கு மேம்பாலம், திருவாகவுண்டனூர் ஏ.வி.ஆர். ரவுண்டானா, செவ்வாய்ப்பேட்டை, முள்ளுவாடி கேட், மணல்மேடு, பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இதில் திருவாகவுண்டனூர் பை-பாஸ் சாலையில் புதிய மேம்பாலம் கட்ட நானே அடிக்கல் நாட்டி பணிகள் முடிந்ததும் அதை நானே கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தது பெரிய சாதனை.

சேலம் மாநகர மக்களின் கோரிக்கைகளை இதற்கு முன்னால் யாரும் நிறைவேற்றவில்லை. தற்போது அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மல்லூர் முதல் அரபி கல்லூரி வரை புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார். அதற்கான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. சேலத்தில் உள்ள பாலங்களை பார்க்கும் போது எனக்கு மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவு தான் வருகிறது. சேலம் மக்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சேலம், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் விமான நிலையம் போல் நவீன வசதியுடன் கூடிய பஸ்போர்ட் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி சென்னையில் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தை மத்திய அதிகாரிகள் பார்வையிட்டு உறுதி செய்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *