ஜி.எஸ். வரிமுறை: அசுஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3000 வரை தள்ளுபடி | Maduraimani
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஜி.எஸ். வரிமுறை: அசுஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3000 வரை தள்ளுபடி

இந்தியாவில் அசுஸ் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரிமுறை அமலாகியுள்ளதைத் தொடர்ந்து விலைகள் குறைந்துள்ளது. இதுகுறித்து அசுஸ் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அசுஸ் சென்போன் 3 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.3000 வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாடல்களின் விலையில் ரூ.2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. சென்போன் 3 ஸ்மார்ட்போன்களுக்கு வோல்ட்இ வசதி  இந்த ஆண்டு வழங்கப்பட்டது.
விலை குறைப்பு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள்
அசுஸ் சென்போன் 3 5.5 [ZE552KL]
இந்தியாவில் ரூ.19,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட அசுஸ் சென்போன் 3 5.5 [ZE552KL] ரூ.3000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அசுஸ் சென்போன் 3 5.2 [ZE520KL]
இந்தியாவில் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் [ZE520KL] ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்போன் 3 மேக்ஸ் 5.5 [ZC553KL]
இந்தியாவில் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் [ZC553KL] ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்போன் 3S மேக்ஸ் [ZC520TL]
இந்தியாவில் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட அசுஸ் சென்போன் 3S மேக்ஸ் [ZC520TL] ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.2 [ZC520TL]
இந்தியாவில் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் 5.2 [ZC520TL] ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைகுறைப்பு நாடு முழுக்க பொருந்தும் என்றும் ப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நாட்டின் முன்னணி இணையதளங்களில் உடனடியாக அமல்படுத்தப்படும் என அசுஸ் தெரிவித்துள்ளது.113

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *