டிடிவி தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் | Maduraimani
Wednesday, December 13
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

டிடிவி தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்

 

113இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற தினகரன் கடந்த மாதம் 3-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். அதன் பின்னர் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் எடப்பாடி அணியினரின் எதிர்ப்பு குறித்து புகார் தெரிவித்தார்.

 

பின்னர் பேட்டி அளித்த அவர் 60 நாட்கள் வரை சசிகலா காத்திருக்க சொல்லி இருக்கிறார். அதுவரை அமைதியாக இருப்பேன் என்று கூறினார்.இந்த 60 நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதியுடன் முடிகிறது. இதன் பின்னர் தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்காக தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய உள்ளனர். தினகரனை அழைத்து தங்கள் பகுதியில் கூட்டம் நடத்துவதில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தீவிரமாக உள்ளனர்.

தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கூறும்போது, ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு தினகரன் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தேனி பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜியும் கரூர் பகுதியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *