தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம் | Maduraimani
Wednesday, June 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தமிழிசை உறுப்பினர் பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது: மக்கள் நீதி மய்யம்

tt

சென்னை:

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக பதிவு செய்ததற்கு ஆதாரம் உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டில் தெரிவித்ததாவது:
உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே …நீங்கள் காட்டியது போல நாங்களும் “படம்” காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ?
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால்
செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை …
பதிவு செய்தமைக்கு நன்றி
முன்னதாக, கமல் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும் என தனக்கு இமெயில் வந்ததாகவும், இதனை தான் காட்ட முடியும் எனவும் தமிழிசை தெரிவித்திருந்தார். மேலும் கிடைக்கும் இமெயில் முகவரிகளில் எல்லாம் கமலின் கட்சியான மக்கள் நீதி மய்யத்திலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *