‘நடராஜனுக்கு செய்ததை ஜெ.,க்கு ஏன் செய்யவில்லை?’ தமிழிசை கேள்வி | Maduraimani
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

‘நடராஜனுக்கு செய்ததை ஜெ.,க்கு ஏன் செய்யவில்லை?’ தமிழிசை கேள்வி

Tamil_News_large_1870513_318_219

சென்னை: ‘நடராஜனுக்கு அறுவை சிகிச்சை அளிக்க, செய்த அவசர ஏற்பாடுகளை, ஜெயலலிதாவிற்கு, சசிகலாவின் குடும்பம் ஏன் செய்யவில்லை?’ என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: நடராஜனுக்கு நடைபெற்ற, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான எல்லா ஏற்பாடுகளும், சட்ட விதிகளுக்கு உட்பட்டே, நடந்துள்ளன என சொல்லப்பட்டாலும், அது, ஏழைகள் எப்படி புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதற்கு, சான்றாக அமைந்துள்ளது. நடராஜனுக்கு, இவ்வளவு பெரிய, அசாதாரண முயற்சிகளை எடுத்து, அறுவை சிகிச்சை அளித்த சசிகலா குடும்பம், இதே போன்ற சிறப்பான, அதிவேக ஏற்பாடுகளை, ஜெயலலிதாவுக்கு ஏன் செய்யவில்லை?
இதே வேகத்தை, விவேகத்தை, ஜெ., உடல் நிலையில் காட்டியிருந்தால், அவர் உயிர் பிழைத்திருப்பாரே என, தோன்றுகிறது. ஜெ., உடல் நிலை, கடைசி காலங்களில், சசிகலாவின் உறவு டாக்டர்களின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்பது நிதர்சனம்.
அரசு மருத்துவமனையில் இறக்கும் மக்களின் உடலுறுப்புகள், தனியார் மருத்துவமனைக்கே அதிகம் பயன்படுவது ஏன்; தஞ்சை மருத்துவக் கல்லுாரியில், உடலுறுப்புகளை அகற்றாமல், சென்னைக்கு ஏன், அந்த இளைஞர் கொண்டு வரப்பட்டார்; விமானத்தில் வந்த போது, அவருடன் ஏன் அரசு மருத்துவர்கள் பயணித்தனர்?
தஞ்சை மருத்துவமனையில், மூளை மரணம் பதிவு செய்யப்பட்டதா; தஞ்சாவூருக்கு சென்று, உடலுறுப்பு வியாபாரம் பேசியவர்கள் யார்; அரசு தரகர்கள் உள்ளனரா; இவை குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *