நான் அப்பல்லோவில் அனுமதிக்கப்படவில்லை.. அன்புமணி ராமதாஸ் | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

நான் அப்பல்லோவில் அனுமதிக்கப்படவில்லை.. அன்புமணி ராமதாஸ்

anbumani-ramadoss345-1518583852

சென்னை:

நான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல்கள் தவறானதாகும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. இதனால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறான தகவல் என்று அன்புமணி ராமதாஸே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் அப்பல்லோவில் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வந்தேன். மற்றபடி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல்கள் தவறு என்றார். இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் தணிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *