நாளை பூமியில் மோதுகிறது சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் | Maduraimani
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

நாளை பூமியில் மோதுகிறது சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்

xtion-600x450-15-1473950131-1522555383.jpg.pagespeed.ic.cX7NTSDG2E

பெய்ஜிங்:

சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்கோங்-1 நாளை காலை பூமியின் மீது விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எடை 9.5 டன் ஆகும். 2011 இறுதியில் சீனாவின் விண்வெளித் துறை தனது டியாங்கோங்-1 என்ற ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. ஆனால் இது பாதியில் செயலிழந்து, தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரமாக இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் எப்போது பூமியை தாக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தற்போது இதன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சீனாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி துறை விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை காட்டும் பணியில் இறங்கியது. இதன் முடிவில் டியாங்கோங்-1 ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பெரிய அளவில் இந்த ஆராய்ச்சி நிலையம் இருந்தது.
டியாங்கோங்-1 ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுவதற்காக சீனா நிறைய விண்வெளி வீரர்களை அனுப்பியது. அந்தக் குழு வேலை பார்த்த போது எதிர்பாராத வகையில் அவர்கள் செய்த தவறால் அந்த ஆராய்ச்சி நிலையம் மொத்தமாக தனது கட்டுப்பாட்டை இழந்தது. எவ்வளவு முயன்றும் அதை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது அந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆராய்ச்சி நிலையம் நாளை பூமியின் மீது மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் கணக்குப்படி நேற்று இந்த ஆராய்ச்சி நிலையம் பூமியில் மோதியிருக்க வேண்டும். ஆனால் காலநிலை மாறுபாடு காரணமாக இதன் வேகம் குறைந்து இருக்கிறது. இதன் எடை 9.5 டன் ஆகும்.
இது 80 சதவிகிதம் பூமியின் எதோ ஒரு கடல்பகுதியில் விழும் என்று கூறப்படுகிறது. ஆனால் சமயங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் கூட விழலால். ஆனால் இதனால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இது பூமியை நெருங்கிய உடன் முழுவதுமாக எரிந்து, பெரிய வானவேடிக்கை போல இருக்கும், பாதிப்பு எதுவும் இருக்காது என்று சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *