நிதிப் பற்றாக்குறை அடிப்படையில் மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும்: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

நிதிப் பற்றாக்குறை அடிப்படையில் மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும்: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் பிமல் ஜலான்

BIMALJALAN

நிதிப் பற்றாக்குறை அடிப்படையில் அரசை மதிப்பிடக்கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் கூறியுள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள், அதன் மூலம் உருவாக உள்ள விளைவுகள், முதலீட்டு உத்திரவாதங்கள் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என்றார்.

இந்திராகாந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் ஜலான் இதனைக் கூறினார். அவர் மேலும் பேசியதாவது:

இந்திய ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமா அல்லது 3.4 சதவீதமா என்கிற விஷயங்கள் மக்களுக்கு முக்கியமான விஷயங்களாக இருக்கிறதா ? மக்கள் இந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நடப்பு நிதியாண்டில் இந்திய ஜிடிபி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்க அரசு இலக்கு வைத்துள்ளது. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியதற்கு பின்னர் அரசின் வருவாய் நிலையற்று இருப்பதால் நடப்பாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கினை அடைவது கடினம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஜலான் குறிப்பிடுகையில் அரசு ஏற்கெனவே நடப்பு நிதி ஆண்டுக்கான பட் ஜெட் எதிர்பார்ப்பில் முதல் 7 மாத ங்களில் 96.1 % இலக்கினை எட்டியுள்ளது. தவிர இலக்கினை எட்டுவதற்கு எந்த தடையுமில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இதனால் நிதிப் பற்றாக்குறை புள்ளிவிவரங்ளை மட்டும் வைத்துக் கொண்டு அரசை மதிப்பிடக் கூடாது. பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கும் விளைவுகள் என்ன, முதலீட்டு உத்தரவாதங்கள் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்.

இதில் எனது ஆலோசனை என்பது, நிதிப் பற்றாக்குறை இலக்கு என்பதிலிருந்து வெளியே வாருங்கள். இப்படி சொல்வதன் அர்த்தம் அதிக பணவீக்கம் அல்லது அதிக வட்டிவிகிதங்கள் என்பது அல்ல என்றார்.

இந்த கருத்தினை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்வி ரெட்டியும் ஆதரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *