நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 33 பேர் சாவு | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 33 பேர் சாவு

115

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகினர்.
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நைஜர் நகரில் இருந்து அந்நாட்டின் பிற பகுதிகளுக்கு ஆற்றில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. அந்த வகையில் நைஜர் பகுதியில் உள்ள கெபி என்ற இடத்தில் இருந்து ஒரு படகில் நேற்று ஏராளமானோர் புறப்பட்டனர்.

அளவுக்கு அதிகமாக படகில் மக்கள் ஏறியதால் சிறிது நேரத்தில் அந்த படகு நடு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர்.

இது பற்றி அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் ஆற்றில் மூழ்கி 33 பேர் இறந்தனர். சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 23 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *