பத்மஸ்ரீ விருது வென்ற நடிகர் டாம் அல்டெர் புற்றுநோயால் மரணம் | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

பத்மஸ்ரீ விருது வென்ற நடிகர் டாம் அல்டெர் புற்றுநோயால் மரணம்

மும்பை:

201709301001115148_Actor-Tom-Alter-Dies-Of-Cancer-At-67_SECVPF

நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என்ற பன்முகத்தண்மை கொண்டவும் ‘பத்மஸ்ரீ’ விருது வென்றவருமான டாம் அல்டெர் (67) தோல் புற்றுநோய் காரணமாக இன்று மரணமடைந்தார்.

கடந்த 1950-ம் ஆண்டில் முசவுரியில் அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த டாம் அல்டெர், புனே சினிமாக் கல்லூரியில் பயின்றார். 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள டாம் அல்டெர்இந்தி, பெங்காலி, தெலுங்கு சினிமாக்களில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

சினிமா மட்டுமல்லாது விளையாட்டு துறையிலிம் பல்வேறு புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது கலைச்சேவையை போற்றும் விதமாக கடந்த 2008-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தோல் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த டாம் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு சினிமா துறையினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *