பருவமழை தீவிரம் : வேகமாக நிரம்பும் தமிழக அணைகள் | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

பருவமழை தீவிரம் : வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்

Tamil_News_large_2059268

சென்னை :

தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை : மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.27 அடி உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 65.15 அடியில் இருந்து 68.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் 14,334 கனஅடியில் இருந்து 32,884 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

பவானியில் வெள்ளம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதை அடுத்து, உபரிநீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

சோலையாறு அணை நிரம்பியது : நீலகிரி மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணை நிரம்பி உள்ளது. அணை நிரம்பியதை அடுத்து பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

முல்லை பெரியாறு நீர்மட்டம் உயர்வு : தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு 1929 கனஅடியில் இருந்து 3321 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் 132 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.40 அடியில் இருந்து 123.50 அடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *