பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி

exam_result7598 x12thresult-1526378299-1526443005.jpg.pagespeed.ic.ecg0NCCu7F

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. இப்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *