போலீசில் ரவுடி பினு சரண் | Maduraimani
Wednesday, June 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

போலீசில் ரவுடி பினு சரண்

binu-rowdy54564-1518498988

சென்னை
போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனரிடம் சரணடைந்தான்.

ரவுடி பினு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடி வந்தனர். பிப்.,6 அன்று பூந்தமல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் பகுதியில் லாரி செட் ஒன்றில் 75க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் இணைந்து பினு பிறந்த நாள் கொண்டாடினார்.

தகவலறிந்த போலீசார், அந்த பகுதியை சுற்றி வளைத்து 75 ரவுடிகளை கைது செய்தனர். ஆனால், பினு மற்றும் சிலர் தப்பி சென்றனர். இதனையடுத்து 4 தனிப்படைகள் அமைத்து தப்பியோடியவர்களை தேடி வந்தனர். அவர்களை சுட்டு பிடிக்கவும் போலீசார் உத்தரவிட்டனர். இந்நிலையில், பினு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனரிடம் சரணடைந்தார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *