‘போலீஸ் இல்ல பொறுக்கி’ ரிட்டர்ன்ஸ் – ‘சாமி 2’ ஷூட்டிங்! | Maduraimani
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

‘போலீஸ் இல்ல பொறுக்கி’ ரிட்டர்ன்ஸ் – ‘சாமி 2’ ஷூட்டிங்!

 

114சென்னை : கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சாமி’. இந்தப் படத்தில் விக்ரம் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன், ‘சிங்கம் 3’ படத்திற்குப் பிறகு ‘சாமி 2’ படம் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார் இயக்குநர் ஹரி.இந்நிலையில், தற்போது விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கிறது.நடிகர் விக்ரம், ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதனால் அவருக்கு இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.திட்டமிட்டபடி படங்களை முடிக்க முடியாமல் இழுத்துக்கொண்டபோகும் சூழல் அடிக்கடி ஏற்பட்டதால் புதிய படங்களில் கமிட் ஆக முடியாமல் சிரமப்பட்டார். இந்தச் சிக்கல்கள் தொடர்கதையாகிப்போனதால் தற்போது தன் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார் விக்ரம்.விக்ரமின் கைவசம் இப்போது 3 படங்கள் இருக்கின்றன. விஜய் சந்தர் இயக்கும் ‘ஸ்கெட்ச்’ படமும் அவற்றில் ஒன்று. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘துருவநட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.25-ம் தேதி முதல் ஹரி இயக்கத்தில் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கவிருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் ஹரி.டெல்லி, ஆக்ரா, ராஜஸ்தான், நெல்லை, பழநி, கேரளா என்று பல இடங்களிலும் ‘சாமி 2’ படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இந்தப் படத்தின் கதையைத் தயார் செய்வதற்கு மட்டும் 8 மாதங்களுக்கு மேல் டைம் எடுத்துள்ளார் ஹரி. வலுவான, மிக மிக வேகமான திரைக்கதையை அமைத்துள்ளாராம் ஹரி.கடந்த ஜூன் மாதமே ‘சாமி 2’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், கௌதம் மேனன் செய்த குழப்பத்தினால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விக்ரம் இம்மாதம் 24-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *