‘மத்திய அமைச்சரின் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி’ | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

‘மத்திய அமைச்சரின் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி’

Tamil_News_large_1927339

பெங்களூரு:

மதச்சார்பற்றோர் பற்றி சர்ச்சை கருத்து கூறிய மத்திய அமைச்சரின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.1 கோடி’ என கர்நாடக முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., எனப்படும், அகில இந்திய மஜிலிஸ் – இ – இத்தேஹாதுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த, பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர், குருசாந்த் பட்டேதார், கலபுரகியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மதச்சார்பற்ற மக்கள், தங்கள் மூதாதையர் பற்றி அறியாதவர்களாக இருப்பதாக, மத்திய அமைச்சர், அனந்த் குமார் ஹெக்டே கூறியுள்ளார். இதன் மூலம், தலித், முஸ்லிம், பிற்பட்டோர் மற்றும் மதச்சார்பற்றவர்களை, அவர் இழிவுபடுத்தி உள்ளார். அனந்த் குமாரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவர் நாக்கை துண்டித்து எடுத்து வருபவருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசளிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *