மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 6 நாடுகளில் ஒரே நாளில் 11 ஷோரூம்களைத் திறக்கிறது | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 6 நாடுகளில் ஒரே நாளில் 11 ஷோரூம்களைத் திறக்கிறது

Photographs - from left KP Abdul Salam - Group Executive Director, Shamlal Ahammed - MD - International Operations, , MP Ahammed, Malabar Group Chairman, Dr PA Ibrahim Haji - Co Chairman, Ameer CMC - Director-

மலபார் குழுமம் ஒரே நாளில் 11 ஷோரூம்களை திறப்பது தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் குழும செயல் இயக்குநர் கே.பி.அப்துல் சலாம், சர்வதேச செயல்பாடுகள் நிர்வாக இயக்குநர் ஷாம்லால் அஹமது, தலைவர் எம்.பி.அஹமது, இணை தலைவர் பி.ஏ.இப்ராஹிம் ஹாஜி, இயக்குநர் அமீர் கலந்துகொண்டனர்.
மலபார் ஜுவல்லரி நிறுவனம் நாளை (ஜனவரி 12) ஒரே நாளில் 6 நாடுகளில் 11 ஷோரூம்களைத் திறக்கிறது; உலகம் முழுவதும் 200 ஷோரூம்கள் என்ற மைல் கல்லைக் கடக்கிறது.
உலகின் டாப் 5 நகைக்கடைகளில் ஒன்றான மலபார் கோல்டு டைமண்ட்ஸ், 6 நாடுகளில் 11 புதிய ஷோரூம்களைத் திறப்பதன் மூலம் அதன் உலகளாவிய தடத்தை வேகமாக விரிவாக்குகிறது. 11 ஷோரூம்களும் நாளை (ஜனவரி 12) ஒரே நாளில் திறக்கப்படும். புதிய ஷோரூம்களைத் திறப்பது, நகைக் கடையின் மொத்த ரீடெய்ல் நெட்வொர்க்கை 208 ஆக உயர்த்தும். ஓர் இந்திய நகை வியாபார ரீடெய்ல் செயின் பெரிய எண்ணிக்கையிலான ஷோரூம்களைத் திறப்பது இதுவே முதல் முறையாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் கெய்ல்மால், அல் ஹசானா லுலு மால், அல் புஹெய்ரா லுலு மால், சஹாரா சென்டர், அஜ்மான் சிட்டி சென்டர், கத்தாரிலுள்ள மால் ஆஃப் கத்தார், ஓமனிலுள்ள லாகூனா மால், மஸ்கட் சிட்டி சென்டர், சிங்கப்பூரில் உள்ள ஏஎம்கே ஹப், மலேசியாவில் ஆம்பங் மால், இந்தியாவில் தெலங்கானாவில் வாரங்கல் ஆகிய இடங்களிலும் இந்தக் குழுமம் ஷோரூம்களைத் திறக்கிறது.
தற்போது, மலபார் கோல்டு 197 ஷோரூம்களைக் கொண்டுள்ளது, அதில் 90 ஷோரூம்கள் இந்தியாவிலும், 107 வெளிநாட்டிலும் உள்ளன. உலகம் முழுவதும் ஷோரூம்களின் விரைவான விரிவாக்கம் என்பது இக்குழுமத்தின் உலகளாவிய தடம் பதித்தல் வியூகத்தின் ஒரு பகுதியாகும். 2017-ம் ஆண்டு மட்டும் மலபார் குழுமம் 27 ஷோரூம்களைத் திறந்துள்ளது.
‘‘விரைவில் அமெரிக்கா, இலங்கை, புருனை மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளோம்” என மலபார் கோல்டு டைமண்ட்ஸ் சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குநர் ஷாம்லால் அஹமது கூறினார்.
மலபார் குழுமம் வீட்டு வசதி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் அதிகாரம் மற்றும் கல்வி போன்ற 5 முக்கிய பகுதிகளில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்காக அதன் வருடாந்திர லாபத்தில் 5 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *