மார்ச் 15-இல் கட்சியின் பெயரை அறிவிக்கிறார் டிடிவி தினகரன் | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

மார்ச் 15-இல் கட்சியின் பெயரை அறிவிக்கிறார் டிடிவி தினகரன்

xdinakaran232-1520741247.jpg.pagespeed.ic.Dx4G6XxAgx

சென்னை:

மார்ச் 15-ஆம் தேதி கட்சியின் பெயரையும் கட்சிக் கொடியையும் டிடிவி தினகரன் அறிமுகப்படுத்துகிறார்.

அதிமுகவை எடப்பாடி அணியிடம் இருந்து மீட்க டிடிவி தினகரன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தனிக் கட்சியாக செயல்படுவதற்கு பெயரை வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினார். அப்போது அனைத்திந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்குமாறு டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.
குக்கர் சின்னத்தை தங்கள் அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குக்கர் சின்னத்தை தினகரன் அணிக்கு ஒதுக்குமாறும் தினகரன் கேட்டுள்ள கட்சியின் பெயர்களில் ஒன்றை கொடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை டிடிவி தினகரன் தனது கட்சிக்கு பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸ், எடப்பாடி தரப்பிலிருந்து ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் பெயர்கள் இல்லாமல் தினகரன் கொடுக்கப்பட்ட பெயர்கள் இல்லை. மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் மேற்கண்ட 3 பெயர்களில் எது கிடைத்தாலும் தினகரனுக்கு நன்மைதான். முதல் இரண்டு பெயர்களை சுருக்கினால் அதிமுக என்று வரும்.

எனவே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை பயன்படுத்தாமல் அவர் கட்சியின் பெயர் இல்லை என்றாகிவிட்டது. இதுகுறித்து டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுரை மேலூரில் 15-ஆம் தேதி நடக்கும் விழாவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. அன்று காலை 9 மணிக்கு கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பெயர் அறிவிக்கப்படும்.

அதிமுகவை கைப்பற்றும் வரை தனி ஒரு இயக்கமாக செயல்படுவோம். மேலூரில் நடைபெறும் கூட்டத்துக்கு தொண்டர்கள் வருமாறு தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *