மீண்டும் 120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

மீண்டும் 120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை

download

சேலம் :

கர்நாடகா அணைகளில் இருந்து 1.43 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70,000 கனஅடியில் இருந்து ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகள் நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 80,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 62,319 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50,000 கனஅடியில் இருந்து 60,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆக.,11) காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.08 அடியாக இருந்த நிலையில், காலை 9.20 மணியளவில் நீர்மட்டம் 119.55 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்இருப்பு 95.01 டிஎம்சி.,யாக உள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் அல்லது நாளை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எட்டும் பட்சத்தில் 40 வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டும் நிலை உருவாகும். இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 1.24 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று 1.20 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்றும் மேலும் 4000 கனஅடி அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 1.10 லட்சம் கன அடியி்ல் இருந்து 1.22 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும்,பரிசல் போக்குவரத்துக்கும் 33 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *