மெக்சிகோவில் நிலநடுக்கத்தில் பள்ளி இடிந்தது: 21 குழந்தைகள் பலி | Maduraimani
Wednesday, June 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

மெக்சிகோவில் நிலநடுக்கத்தில் பள்ளி இடிந்தது: 21 குழந்தைகள் பலி

121

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்து உள்ளது.ஒரு பள்ளிக்கூடம் இடிந்தது 21 குழந்தைகள் பலியானார்கள்.மெக்சிகோவில் பியூப்லா நகரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இது வரையிலும் 150 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், கட்டிடங்கள், வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். முதல் இணைப்பு மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மெக்சிகோவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் ஓடி ஒளிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பியூப்லா பகுதிக்கு அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் குலுங்கியதால், பொதுமக்கள் பயந்து வீதிக்கு வந்ததாகவும், மேலும் சிலர் அங்கிருக்கும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெக்சிகோ சிட்டியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் அங்குள்ள தொடக்கப்பள்ளி இடிந்து தரைமட்டமானது. அதில் 25 பேர் பலியாகினர், அவர்களில் 21 பேர் பள்ளி குழந்தைகள், 4 பேர் பெரியவர்கள். இத்தகவலை மெக்சிகோ கல்வித்துறை கீழ்நிலை செயலாளர் ஜாலியர் டிரவினோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *