மோடி கேர் : ஆக.,15ல் அறிமுகம் | Maduraimani
Sunday, September 23
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

மோடி கேர் : ஆக.,15ல் அறிமுகம்

download

புதுடில்லி :

மோடி கேர் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை, லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே 50 கோடி இந்தியர்களுக்கும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 50 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், மோடி கேர் திட்டம் கொண்டுவரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்து வரும் மத்திய அரசு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, திட்டத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மோடி கேர் திட்டத்துக்கு, மாநிலங்களும் பங்கீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதால், ஒரு சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை குறிவைத்துள்ள பாஜ, தேர்தலுக்கு முன்பே 50 கோடி இந்தியர்களுக்கும் மோடி கேர் திட்டத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *