ரஜினியின் ‘காலா’ ஏப்.27-ல் ரிலீஸ்- தனுஷ் அறிவிப்பு! | Maduraimani
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ரஜினியின் ‘காலா’ ஏப்.27-ல் ரிலீஸ்- தனுஷ் அறிவிப்பு!

kaala-1-60-1518266446

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கபாலி’ படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘காலா’ படம் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் ‘2.ஓ’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் எனக் கூறப்பட்டது.

ஆனால், ‘2.ஓ’ தாமதத்தால் ‘காலா’ முன்கூட்டியே வெளியாக இருக்கிறது. காலா திரைப்படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
‘கபாலி’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. இப்படம் படுமாஸான ஜனரஞ்சகப் படமாகத் தயாராகியுள்ளது என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம். இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியலில் இறங்க தீவிரம் காட்டி வருகிறார். தன் மன்றத்தை பலப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதேசமயம், ரஜினி நடித்து முடித்துள்ள ‘2.O’ மற்றும் ‘காலா’ பட வேலைகளும் மும்முரமாய் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஷங்கரின் 2.ஓ படத்துக்கு பிறகு தான் ‘காலா’ வெளிவரும் என்ற நிலை இருந்தது. ஆனால் 2.ஓ படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் காலா படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளிவர அதிகவாய்ப்பு உள்ளது என தகவல்கள் கசிந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *