ரஷ்யா அதிபர் தேர்தல்- புதின் மீண்டும் வெற்றி! முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார்! | Maduraimani
Saturday, April 21
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ரஷ்யா அதிபர் தேர்தல்- புதின் மீண்டும் வெற்றி! முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார்!

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் புதின் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. ரஷ்யா அதிபர் தேர்தலில் புதின் மற்றும் ஏழு வேட்பாளர்கள் களத்தில் மோதினர். மொத்தம் 96,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. புதின் 76% வாக்குகளைப் பெற்று மீண்டும் வென்றார். அடுத்த 6 ஆண்டுகாலத்துக்கு புதின் அதிபராக நீடிப்பார்.

புதினை அடுத்து 2-வது இடத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் குருதினின் 12% வாக்குகளைப் பெற்றார். ஆனால் தேர்தலில் புதின் முறைகேடு செய்தார் என்கின்றன எதிர்க்கட்சிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *