ராகுல் காந்தி மனிதநேயம்.. கமல்ஹாசன் பாராட்டு | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ராகுல் காந்தி மனிதநேயம்.. கமல்ஹாசன் பாராட்டு

xkamal-haasan78-1519271690.jpg.pagespeed.ic.E-etN1EVI7

ஈரோடு:

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி கூறியது மனிதநேயம் என்று கமல் தெரிவித்தார். சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுலிடம் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா எ்ன்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் முன்பு கோபத்தில் இருந்தோம். தற்போது மன்னித்துவிட்டோம் என்றார்.
ராகுலின் கருத்தை அரசியல் கட்சிகள் வரவேற்கின்றன. ஈரோட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம்.

ஆனால் நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு. மனிதநேயம் வேறு சட்டத்தின் தளர்வு வேறு. கிறிஸ்துவ அமைப்புகள் எனக்கு நிதி உதவி செய்வதாக கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இதை கேட்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. தான்தோன்றித்தனமாக கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றார் கமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *