ராஜ்யசபா எம்.பி., பதவியில் இருந்து சரத்யாதவ், அலி அன்சாரி தகுதி நீக்கம் | Maduraimani
Wednesday, June 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ராஜ்யசபா எம்.பி., பதவியில் இருந்து சரத்யாதவ், அலி அன்சாரி தகுதி நீக்கம்

Tamil_News_large_1911714

புதுடில்லி:

ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத்யாதவ், அலி அன்வர் அன்சாரி ஆகியோர் தகுதி நீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கையா உத்தரவிட்டார்.

பீஹாரில் காங்., ராஷ்ட்ரீயஜனதா தள கூட்டணியை முறித்துவிட்டு திடீரென பா.ஜ.வுடன் கூட்டணிவைத்தார் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதீஷ்குமார். இதனால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் சரத் யாதவ், அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளதால் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இருவரையும் தகுதி நீக்கம் கோரி ஐக்கிய ஜனதா தள கட்சி ராஜ்யசபா தலைவர் ஆர்.சி.பி. சிங், பார்லி.ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுவிடம் புகார் அளித்தார். இதையடுத்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 10-ன் கீழ் சரத் யாதவ், அலி அன்வர் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை ராஜ்சபா செயலர் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *