ரூ. 1000 கோடி கிளப்பை துவங்கிய பிரபாஸ்: நொந்து நூடூல்ஸான கான்கள் | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ரூ. 1000 கோடி கிளப்பை துவங்கிய பிரபாஸ்: நொந்து நூடூல்ஸான கான்கள்

மும்பை: பாகுபலி 2 பட வசூலால் பாலிவுட்டின் கான்கள் எல்லாம் மிரண்டு போய் உள்ளார்களாம். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2 என்பது குறிப்பிடத்தக்கது.  கான்கள் கான்கள் இல்லை, கபூர்கள் இல்லை, ரோஷன் இல்லை இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான பாகுபலி 2 படம் பாக்ஸ் ஆபீஸில் சுனாமியாய் வசூல் செய்து வருகிறது. மிரண்டு பாகுபலி 2 இந்தியில் மட்டும் ரிலீஸான பத்து நாட்களில் ரூ. 327. 75 கோடி வசூல் செய்துள்ளது. கான்கள் பட வசூலை பாகுபலி 2 தூக்கி சாப்பிட்டுள்ளது அவர்களை மிரள வைத்துள்ளது. கடுப்பு பாகுபலி 2 இந்தி பதிப்பை வெளியிட்டவர் பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் தான். 3 கான்களுமே கரணுக்கு மிகவும் நெருக்கம். ஆனால் யாருமே பாகுபலி 2 பற்றி ட்வீட் செய்யவில்லை. கரண் பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடி வசூல் செய்ததும் அதை ட்விட்டரில் அறிவித்து பெருமைபட்டவர் கரண் ஜோஹார். ஒரு டப்பிங் படம் இந்தி பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்வது கான்களுக்கு பிடிக்கவில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *