லண்டன் டாக்டர்: அழகிரி ஏற்பாடு! | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

லண்டன் டாக்டர்: அழகிரி ஏற்பாடு!

Tamil_News_large_2073014

முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் கொள்கை பரப்பு செயலருமான ராஜா, கருணாநிதி உடல் நலம் குறித்தும் சிகிச்சை பற்றியும் அவ்வப்போது பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறார். அதற்கு முன் ஸ்டாலின், அழகிரி ஆகியோரிடம், தகவல் தெரிவித்து விடுகிறார்.

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி மட்டும் தான் ஸ்டாலின், அழகிரி இருவரிடமும் சரிசமமாக, பேசி வருகிறார். இருவரிடமும் பாச மழை பொழிந்து வருகிறார் என கனிமொழி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாநிதிக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் அடிக்கடி விசாரிக்கும் அழகிரி தன்னுடைய டாக்டர் நண்பர் உதவியுடன், லண்டன் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் லண்டன் டாக்டர் வரவழைக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் பெறவும் அவர் ஏற்பாடுகள் செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர்ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *