வாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்! | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

வாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்!

வாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) நடைபெறுகிறது. இதில் நோக்கியா மொபைல்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 1 (Nokia 1), நோக்கியா 6 (Nokia 6), நோக்கியா 7 பிளஸ் (Nokia 7 Plus), நோக்கியா 8 சிரோக்கோ (Nokia 8 Sirocco) மற்றும் நோக்கியா 8110 4G (Nokia 8810 4G) ஆகிய 5 புதிய மொபைல்களை அறிமுகம் செய்தது.

இதில் வாழைப் பழ வடிவிலான நோக்கியா 8110 மொபைல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த மொபைல் ‘தி மேட்ரிக்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானது. அதில் வரும் நியோ என்ற பாத்திரம் வாழைப் பழ வடிவிலான நோக்கியா மொபைல் பயன்படுத்துவது பலரையும் ஈர்த்தது.

ஏற்கெனவே நோக்கியா 8110 மொபைல் 1996 ஆம் ஆண்டு அறிமுகமானது. இப்போது புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ள நோக்கியா 8110 மொபைல் 4G வசதி கொண்டது. ‘Banana phone’ என்றும் குறிப்பிடப்படும் இந்த மொபைல் வாழைப்பழம் போல சற்று வளைந்திருக்கும்.

இதில், பேசிக் போன் போன்ற கீபேட் மூடப்பட்டிருக்கும். அதை திறந்து மூடுவதன் மூலம் அழைப்புகளை ஏற்கவோ துண்டிக்கவோ செய்யலாம். இத்துடன் கூகுள் அசிஸ்டெண்ட், கூகுள் மேப், பேஸ்புக், ட்விட்டர், ஆகிய அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்யும் வசதியும் உண்டு. ஜிமெயில், அவுட்லோக் போன்ற ஈமெயில் அப்ளிகேஷன்களும் உள்ளன.

குவால்காம் 205 மொபைல் சென்சார், ஸ்னேக் கேம், நோக்கியாவின் கை (Kai) இயங்குதளம் ஆகியவை உள்ளன. கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் விற்கப்படும். இதன் விலை சுமார் ரூ.6,300 ஆக இருக்கலாம் என்றும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *