விஷால் நடிப்பில் இரும்புத்திரை 2 – படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம் – Maduraimani
Friday, April 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

விஷால் நடிப்பில் இரும்புத்திரை 2 – படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.
தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்துக்கு ஆந்திராவிலும் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை அள்ளியது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது.

தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. 
இதன் படப்பிடிப்பில் அடுத்த மாதத்தில் இருந்து விஷால் கலந்துகொள்கிறார். விஷால் நடிப்பில் அயோக்யா படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *