ஸ்ரீதேவிக்கு எதற்கு அரசு மரியாதை?: இது தான் காரணமாம் | Maduraimani
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஸ்ரீதேவிக்கு எதற்கு அரசு மரியாதை?: இது தான் காரணமாம்

sridevi323-1519879996

மும்பை:

ஸ்ரீதேவிக்கு எதற்காக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார் நடிகை ஸ்ரீதேவி. மும்பை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.
மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவியின் உடல் மீது மூவர்ண கொடியை போர்த்துவதா? அவருக்கு எதற்காக அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்கள்.
சட்டப்படி பார்த்தால் முன்னாள், தற்போதைய பிரதமர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய மாநில, மத்திய அமைச்சர்கள் இறந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்தப்படும். ஆனால் அந்த சட்டம் தற்போது மாறிவிட்டது.
யாருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்துவது என்பதை மாநில அரசுகளே முடிவு செய்கின்றன. அரசு மரியாதை அளிக்கப்படும் நபரின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செய்யப்படும்.
அறிவியல், சினிமா, இலக்கியம், சட்டம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இறந்துவிட்டால் அவர்களை கவுரவிக்கும் விதமாக அரசு மரியாதை அளித்து வருகிறது மாநில அரசுகள்.
ஸ்ரீதேவி சினிமாத் துறையில் சிறந்து விளங்கினார். பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆன அவரை கவுரவிக்கும் விதமாக அரசு மரியாதை அளிக்கப்பட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *